Cricket

இந்திய அணியின் வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன்.. சிராஜ் குறித்து அண்ணன் பேட்டி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கோஸ் 4 நாட்களுக்கு முன்னதாக நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார். இந்தநிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் பொருட்டு, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் சிராஜ்.

தந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளாமல் இந்திய அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து ஆஸ்திரேலியா கிளம்பினார்.

இந்திய அணியின் வெற்றியை தந்தைக்கு அஞ்சலியாக செலுத்துவேன்.. சிராஜ் குறித்து அண்ணன் பேட்டி!

மேலும் இதுகுறித்து அவரது சகோதரர் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நிச்சயம் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றி பெற செய்வதே என் தந்தைக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

நான் வீடு திரும்புவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார். இந்திய அணியின் வெற்றியை அப்பாவுக்கு அஞ்சலியாக செலுத்துவேன் என்று சிராஜ் உறுதியாக இருந்தது மதிப்பிற்குரிய விஷயமாகும்.

ஆஸ்திரேலிய தொடரில் அவன் தேர்வானது அப்பாவுக்கு மகிழ்ச்சியினைக் கொடுத்தது. அவர் எங்களுடன் பேசும்போது அப்பாவை நினைத்து கதறி அழுகிறார். நாங்கள் அவரை ஆறுதல் கூறி தைரியப்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Related posts

ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்குகிறது இங்கிலாந்து- பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்!!

TamilSportsNews

2011 உலகக் கோப்பை மேட்ச்-பிக்சிங் என்பது பொய் குற்றச்சாட்டு… கைவிடப்பட்ட வழக்கு!!

TamilSportsNews

தாறுமாறு பண்ணிய வில்லியர்ஸ் – கொல்கத்தாவை வீழ்த்திய ஆர்சிபி!!

TamilSportsNews

Leave a Comment