Cricket

2002- 2005 ஆம் ஆண்டு காலகட்டங்களில் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் என நினைத்தேன்… மிதாலி ராஜ் பேட்டி!!

இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “2013 ஆம் ஆண்டு பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய  அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் கூட பங்கேற்கும் தகுதியில் இல்லை.

உண்மையில் அது வேதனையைக் கொடுத்தது. 2017 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெற்றியினை நோக்கி கடுமையாக பயிற்சிகள் மேற்கொண்டேன். அதன் பலனாக உலக கோப்பையில் இறுதிப்போட்டியில் பங்கேற்றோம்.

2002- 2005 ஆம் ஆண்டு காலகட்டங்களில் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் என நினைத்தேன்... மிதாலி ராஜ் பேட்டி!!

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் ஓய்வு குறித்து அறிவிக்க எண்ணினேன். 2021 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்வதே என்னுடைய இலட்சியமாகும்.

தற்போதும் அதற்காக நாங்கள் தீவிரமாகத் தயாராகி வருகிறோம். ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவும், ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களின் பாராட்டிற்கும் நன்றிகள். அனைவரின் ஆதரவுடனும், 2021 ஆம் ஆண்டு உலக கோப்பையை கையில் ஏந்துவோம்” என்று கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் விளையாடுவேன் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை, சிறு வயது முதலே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக வேண்டும் என்று எண்ணியே நான் படித்தேன்.   2002- 2005 ஆம் ஆண்டு காலகட்டங்களில் கிரிக்கெட்டில் இருந்து விலகலாம் என நினைத்தேன்.

பல திறமையான வீராங்கனைகள் மற்ற துறைகளுக்கு மாறி விட்டானர். அதன்பின்னர் பிசிசிஐயின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் பெண்கள் கிரிக்கெட் அணியின் பல மாற்றங்கள் ஏற்பட்டன” என்று  கூறினார்.

Related posts

U19 உலக கோப்பை… வீரரைக் காயப்படுத்திய குரங்கு.. ஆஸ்திரேலியா திரும்பிய வீரர்!!

TamilSportsNews

25 வது திருமணநாள்: மனைவிக்கு சச்சின் கொடுத்த சர்ப்ரைஸ்… வைரல் வீடியோ!!

TamilSportsNews

உலகக் கோப்பை தான் என்னுடைய டார்கெட்.. குல்தீப் யாதவ் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment