Cricket

என்னை ஏன் தடைசெய்தார்கள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை.. முகமது அசாருதீன் பேட்டி!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சமீபத்தில் தராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவியேற்றார். உலகக்கோப்பையில் 3 முறை கேப்டனாக இருந்த அசாருதீன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தநிலையில், விசாரிக்கப்பட்டு நீதிமன்றம் இவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு தடை விதித்தது.

தற்போது இவர் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக பதவியேற்றிருப்பது குறித்த சர்ச்சைகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்தநிலையில், தற்போது அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ஏன் தடை விதிப்பிற்கு ஆளானார் என்பது குறித்து தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

என்னை ஏன் தடைசெய்தார்கள் என்று எனக்கு இன்னும் தெரியவில்லை..  முகமது அசாருதீன் பேட்டி!!

முகமது அசாருதீன் கூறும்போது, ஏன் தடைசெய்தார்கள் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை: முகமது அசாருதீன், “கசப்பான சம்பவங்கள் குறித்து நான் யோசிப்பது கிடையாது, அந்தப் பழியினை யார்மீதும் மத்த விரும்பவில்லை. நான் ஏன் தடை செய்ப்பட்டேன் என்பது குறித்து எனக்குத் தெரியாது.

நான்12 ஆண்டுகளாக இதில் இருந்து விடுபட போராடினேன், இப்போது விடுபட்டு மகிழ்ச்சியில் உள்ளேன். ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக தேர்வு ஆன பின்னர் கசப்பான விஷயங்கள் மறைந்து போயின.

கிரிக்கெட் வாழ்க்கையில் 17ஆண்டுகள் இருந்துள்ள நான், 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்துள்ளேன். இது போன்ற விஷயங்கள் அமையப் பெற்ற நான் பாக்கியசாலியே. நான் இப்போது திருப்தியாகவே உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது இன்னும் பதற்றத்தினை ஏற்படுத்துகிறது.. இயான் மோர்கன் பேட்டி!!

TamilSportsNews

தென் ஆப்ரிக்க ‘ஏ’ அணியை துவம்சம் செய்த இந்திய ‘ஏ’ அணி!

TamilSportsNews

சிஎஸ்கேக்குத் தான் கப்!! இவரே சொல்லிட்டார்.. அப்புறம் என்ன!!

TamilSportsNews

Leave a Comment