13 வது ஐபிஎல் போட்டி தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது, இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் சிறப்பாக விளையாடி, முதல் இரண்டு இடங்களைப் பெற்றன.
இந்த சீசனில் மிகவும் மோசமான ஆடிய அணிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் இராஜஸ்தான் இராயல்ஸ் அணிகளாகும், இந்த இரண்டு அணிகளைப் பொறுத்தவரையில் கேப்டன்ஷிப் சரியில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியினை முடித்த கையோடு இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

இந்தநிலையில் இராஜஸ்தான் இராயல்ஸ் அணியின் கேப்டனான ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய ஆட்டம் சொதப்பலாக இருந்ததாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அதாவது அவரது பேட்டியில், “ஐபிஎல் தொடரில் நான் எனக்கான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. என்னுடைய ஆட்டம் சுமாராக இருந்ததை நான் உணர்ந்தேன். பல போட்டிகளில் நான் சொதப்பவும் செய்தேன். தற்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பங்குபெற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது நான் பார்முக்கு திரும்பியுள்ளேன், இப்போதுதான் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.