Cricket

22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன்.. கங்குலி பேட்டி!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 13 வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் பயோ பபுள் முறை, கொரோனா பரிசோதனைகள், ரசிகர்கள் அனுமதி இல்லாமல் போட்டி எனப் பல முறைகளில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியினை நடத்தி முடித்தது.

அந்தவகையில் ஐபிஎல் போட்டியினை சிறப்பாக நடத்தி முடித்ததில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலியின் பங்கு மிகவும் முக்கியத்துவமானது. அடுத்த ஆண்டு இந்தியாவில்தான் 14 வது ஐபிஎல் சீசன் நடைபெறும் என்றும் கூறியதோடு, அவர் தற்போதுவரை 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கங்குலி கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டியானது மிகவும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் பி.சி.சி.ஐ. நடத்தி முடித்ததற்கு வீரர்கள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பு தான் காரணமாகும்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நான் இதுவரை 22 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளேன். எனக்கு கொரோனாத் தொற்று இல்லை என்ற போதிலும், அதிக அளவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் இருந்ததே நான் இவ்வளவு முறை பரிசோதனை மேற்கொள்ளக் காரணமாகும்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தமாக 400 பேர் பயோ பபுள் முறையில் இருந்தநிலையில் போட்டி நடைபெற்ற 2½ மாத கால அளவில் மொத்தமாக 35 க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.” என்று கூறியுள்ளார்.

Related posts

பேட்டிங்க் சரியே இல்லை… புட்டு புட்டு வைத்த கேப்டன்…

TamilSportsNews

பிசிபியின் சந்தேகம்…. வங்கதேச வீரர்களிடம் விசாரணை!!!

TamilSportsNews

சென்ச்சுரியை மிஸ் பண்ணிட்டங்களே… 94 ரன்களுடன் அவுட் ஆன கிறிஸ் லின்!!

TamilSportsNews

Leave a Comment