Tennis

இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை… ரபெல் நடால் கருத்து!!

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை உலக அளவில் 30,41,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 2,11,159 பேர் இறந்துள்ளனர். இரண்டு மூன்று இலக்கங்களில் இருந்த இந்த எண்ணிக்கையானது தற்போது பல லட்சங்களைத் தாண்டி படையெடுக்கிறது.

கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க உலகம் முழுவதிலும் விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை, பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டும் சில போட்டிகள் கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டும் உள்ளன.

இந்தநிலையில் விரைவில் டென்னிஸ் போட்டியை தொடங்க முடியும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்று டென்னிஸ் வீரரான ரபெல் நடால் கூறியுள்ளார்.

இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை… ரபெல் நடால் கருத்து!!

இதுகுறித்து அவர் கூறியதாவது, “இப்போதைய சூழ்நிலையில் நாம் எப்போது இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்றே தெரியவில்லை. மேலும் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் நிலைமை சீராகி விரைவில் டென்னிஸ் போட்டியை தொடங்க முடியும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை.

டென்னிஸ் போட்டியில் ஒவ்வொரு வாரமும் பயணம் செய்யும்படியே இருக்கும். ஹோட்டலில் தங்குதல் போன்றவற்றினைத் தவிர்க்க முடியாது.

ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது சரியான தீர்வு இல்லை என்ற போதிலும், ஒவ்வொரு தொடரின்போதும் நாம் ஏராளமான நபர்களை சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.

உள்ளூர்ப் போட்டிகளில் இது ஓரளவு சாத்தியம் என்றாலும், சர்வதேச அளவிலான போட்டிகளில் இது சாத்தியமாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

Related posts

உலக டென்னிஸ் : தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெற்ற ஜோகோவிச்

TamilSportsNews

ஆண்கள் மற்றும் மகளிர் டென்னிஸ் சங்கங்கள் ஒன்றிணைய வேண்டும்… ரோஜர் ஃபெடரர் சொல்லும் ஐடியா!!

TamilSportsNews

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி: தமிழக வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமாருக்கு வாய்ப்பு

TamilSportsNews

Leave a Comment