Cricket

ரோகித் சர்மாவின் தீவிர ரசிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.. பெர்குசன் பேட்டி!!

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் முதல் அனைத்திலும் அசத்தி வருகிறார். உலக அளவில் பேட்டிங்கில் கை தேர்ந்தவர்களில், இவருக்கு இணை இவரே என்று சொல்லும் அளவு இவரது பேட்டிங்க் திறன் இருந்துவருகிறது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் விளாசியவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இரட்டைசதம் அடிக்கவில்லை. டி 20 போட்டியில் இரட்டை சதம் விளாசும் திறமை கொண்டவர், ரோகித் சர்மாவே ஆவார்.

ரோகித் சர்மாவின் தீவிர ரசிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.. பெர்குசன் பேட்டி!!

ஒரு கேப்டனாக நெருக்கடியான சூழலில் பதற்றம் இன்றி திறம்பட சமாளிக்கிறார். இவர் மும்பை அணி 4 முறை ஐ.பி.எல். கோப்பையை வெல்லக் காரணமாகவும் இருந்துள்ளார்.

ரோகித் சர்மா குறித்து நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் அளித்த பேட்டியில் ‘‘இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா பேட்டிங்கில் அற்புதமானவராகத் திகழ்கிறார். ரோகித் சர்மாவை துவக்கத்தில் அவுட் ஆக்க முடியவில்லை எனில் அதன்பின்னர் அவர் கடும் சவாலானவராக உருவெடுத்து விடுவார்.

ரோகித் சர்மாவின் தீவிர ரசிகன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்.’’ என்று கூறியுள்ளார்.

Related posts

ஐபிஎல் போட்டிக்காக உலக கோப்பை டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. கடும் கோபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!

TamilSportsNews

சஞ்சு சாம்சனுக்கு அடித்த லக்… தவானுக்கு பதில் மீண்டும் வாய்ப்பு!!

TamilSportsNews

என்னது இங்கயும் சூப்பர் ஓவரா? சூப்பர் ஓவரில் ஜமாய்த்த இங்கிலாந்து அணி!!

TamilSportsNews

Leave a Comment