Football

ஆட்டத்தையே மாத்திடுச்சு… லாஸ்ட் மினிட்ல போட்ட கோல்… ட்ராவில் முடிஞ்ச ஆட்டம்

6 வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் களம் இறங்கின

துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 43வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் மொகமது லர்பி ஒரு கோல் போட்டார்.

ஆட்டத்தையே மாத்திடுச்சு… லாஸ்ட் மினிட்ல போட்ட கோல்… ட்ராவில் முடிஞ்ச ஆட்டம்

 இதனால் முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணியும் போராடி வந்தது, இருப்பினும் ஆட்ட இறுதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

அதன்பின்னர், கூடுதலாக நேரம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் 93வது நிமிடத்தில் ஐதராபாத் அணி வீரர் மார்கோ ஸ்டான்கோவிக் பதில் கோல் திருப்பினார். இதன்மூலம் ஆட்டம் சமநிலை ஆகிப் போனது.

இறுதியில், ஐதராபாத், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதன்மூலம் மும்பை அணி 20  புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத் அணி 10 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

Related posts

கோபா அமெரிக்கா கால்பந்தில் கால் இறுதிக்கு முன்னேறிய பிரேசில்

TamilSportsNews

கடைசி நிமிட கோல்… கோவாவை வீழ்த்திய பெங்களூரு!!

TamilSportsNews

கொரோனாவின் கோரப்பிடி… 21 வயது ஸ்பெயின் கால்பந்து பயிற்சியாளர் பலி….

TamilSportsNews

Leave a Comment