Cricket

தோனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தோல்வியுற்ற பின்னர், தோனி இரண்டு மாத காலத்திற்கு விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனால் தென் ஆப்ரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. அதன்பின்னர்  நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் தனது நேரத்தினை செலவிட்டு வருகிறார், ஐபிஎல் போட்டியானது செப்டம்பர் 19-ந்தேதி துவங்க உள்ள நிலையில் ரசிகர்கள் தோனியின் கிரிக்கெட் எண்ட்ரியினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

தோனிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்!!

கொரோனா ஊரடங்கின்போது, அவ்வப்போது தோனி, அவரது மகள் ஷிவா குறித்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாவது வழக்கம். அந்தவகையில்  சாக்ஷி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு புகைப்படத்தை சாக்‌ஷி பகிர்ந்துள்ளார். அதாவது ஷிவா தோனி கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷிவாவின் கையில் இருப்பது தோனியின் இரண்டாவது குழந்தையா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சிலர் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்த்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

கோலியை எல்பிடபிள்யூ ஆக்கியாச்சு… பிளானை செஞ்சிட்டோம்ல… டிரென்ட் போல்ட் பேட்டி!!

TamilSportsNews

அய்யோ போச்சே… கப்பு போச்சே.. 165 ரன்களில் இந்தியா ஆல் அவுட்!!

TamilSportsNews

ஐபிஎல் திருவிழா போல் இருந்தது… நினைவுகூர்ந்த பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல்!!

TamilSportsNews

Leave a Comment