Cricket

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஹர்திக் பாண்ட்யா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஜூன் மாதம் தான் தந்தையாகப் போகிறார் என்று கூறி பலருக்கும் ஷாக் கொடுத்து இருந்தார். அதாவது பாண்ட்யா  பல ஆண்டுகளாக தனது தோழியான நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடன் வாழ்ந்து வருகிறார்.

பல நேரங்களில் இவர்கள் இருவரின் உறவு குறித்தும், இவர்கள் தனியாக வாழ்வது குறித்த தகவல்களும் வெளியாகிய வண்ணமே இருந்தன. இருப்பினும் இவர்கள் இருவர் தரப்பிலும் இதுகுறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தநிலையில், ஜனவரி மாதம் ஹர்திக் தன்னுடைய காதல் மற்றும் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது குறித்து அறிவித்தார்.

குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் ஹர்திக் பாண்ட்யா!!

மேலும் அத்துடன் புத்தாண்டினை நடிகை நடாசா ஸ்டான்கோவிச் உடன் கொண்டாடிய புகைப்படங்களையும் பகிர்ந்தும் இருந்தார்.

ஜூன் மாதம் நடாஷா கர்ப்பமாக இருப்பதாக கூறி வலைதளங்களில் வைரலானது, இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யாவும், நடாஷாவும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அவர் கர்ப்பம் குறித்த தகவலைப் பகிர்ந்து இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன் தினம் 31 ஆம் தேதி ஜூலை மாதம் இவரது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து அவர் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதன்பின்னர் இவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் இன்ஸ்டாகிராமில் தொடர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஐ.சி.சி. டெஸ்ட் போட்டி: இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம்

TamilSportsNews

ஒரு வெற்றி போதும்… எங்களுக்கு எதுவும் சாத்தியம்… வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேட்டி!!

TamilSportsNews

தூள் கிளப்பிய துவக்க வீரர்கள்.. தாக்குப் பிடிக்காத ஹோபார்ட் ஹரிகேன்ஸ்.. சிட்னி தண்டருக்கு ஜாலியோ ஜாலி

TamilSportsNews

Leave a Comment