Cricket

கங்குலி கேப்டன்ஷிப்பில் கிடைத்த ஆதரவு மற்றவர்கள் கேப்டன்ஷிப்பில் கிடைக்கலை… யுவராஜ் சிங் பேட்டி!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் வீரர் யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.

தற்போது கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில், தனது பழைய கிரிக்கெட் அனுபவங்கள் மற்றும் தருணங்கள் பற்றி பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் யுவராஜ் சிங்  கங்குலியிடம் கிடைத்த ஆதரவு தோனி, விராட் கோலியிடம் கிடைக்கவில்லை என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

கங்குலி கேப்டன்ஷிப்பில் கிடைத்த ஆதரவு மற்றவர்கள் கேப்டன்ஷிப்பில் கிடைக்கலை… யுவராஜ் சிங் பேட்டி!!

யுவராஜ் சிங் கூறியதாவது, ‘‘சவுரவ் கங்குலி கேப்டன்ஷிப் காலத்தில் ஆடியபோது மிக மோசமான தருணங்களை எதிர்கொள்ளும் அளவு அவர் ஆதரவு கொடுத்துள்ளார், அவரது தலைமையில் விளையாடிய நாட்கள் சிறப்பானவை.

ஆனால் இந்த ஆதரவானது தோனி மற்றும் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பில் கிடைக்கவில்லை.

சச்சின் கேப்டன்ஷிப்பில் முத்தையா முரளீதரன் பந்து எனக்கு டஃப் கொடுக்கையில், சச்சின் தெண்டுல்கர் ஸ்வீப்பிங் ஆடுமாறு ஆலோசனை கூறினார். அது எனக்கு உதவியாக இருந்தது.

அதேபோல் மெக்ராத் அவுட் ஸ்விங் பவுலிங் மூலம் டஃப் கொடுக்க ஆரம்பிக்க, டெஸ்ட் போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கிடைக்காததால் நான் மைதானத்தில் இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்தேன், அதனால் அதில் இருந்து தப்பித்தேன்’’ என்று கூறியுள்ளார்.

Related posts

வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க… வெளுத்து வாங்கிய பாகிஸ்தான் முன்னாள் வீரர்!!

TamilSportsNews

பழைய பிங்க் பந்தில் பிரச்சினை இல்லை… கணித்து சொன்ன கேப்டன்!!!

TamilSportsNews

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

TamilSportsNews

Leave a Comment