Cricket

புற்றுநோயில் இருந்து மீண்ட பின்னர் கோலி, தோனி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை.. யுவராஜ்சிங் பேட்டி!!

யுவராஜ் சிங் ஒரு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மேலும் இவர் இந்திய அணி மற்றும் இருபது 20 ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் கடந்த ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஓய்வு பெற்றபின்னர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்து பேட்டி கொடுத்துவந்த யுவராஜ்சிங் கூறுகையில், “இந்திய அணியில் நான் மீண்டும் திரும்பும் போது கேப்டன் கோலி எனக்கு பெரிய அளவில் ஆதரவு அளித்தார். அவர் ஆதரவு அளிக்கவில்லை எனில், நிச்சயம் நான் இந்திய அணிக்குத் திரும்பி இருக்க முடியாது.

புற்றுநோயில் இருந்து மீண்ட பின்னர் கோலி, தோனி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை.. யுவராஜ்சிங் பேட்டி!!

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு முன்னர் வரை தோனி நீங்கள் அணியின் முக்கியமான வீரர் என்று எப்போதும் சொல்வதுண்டு. ஆனால் மீண்டும் உடல் நலம் திரும்பி அணிக்குத் திரும்பியபோது நிறைய விஷயங்கள் மாறி இருந்ததை உணர்ந்தேன்.

சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி ஆதரவு அளித்தார். லோகேஷ் ராகுலுக்கு விராட் கோலி ஆதரவு அளித்தார். ஆனால் புற்றுநோயில் இருந்து மீண்ட பின்னர் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என நான் குறை சொல்லமாட்டேன். ஏனெனில் எனக்கே என் மீது நம்பிக்கை வர சில காலங்கள் ஆயின.” என்று கூறியுள்ளார்.

Related posts

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி வெற்றி

TamilSportsNews

அவங்க இருந்திருந்தா… எப்படியும் ஆகி இருக்கலாம்… வங்கதேச அணியின் கேப்டன் கருத்து!!

TamilSportsNews

சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்… வளைத்துப் பிடித்த போலீசார்!!

TamilSportsNews

Leave a Comment