Football

ஐ.எஸ்.எல். கால்பந்து : சமநிலையில் முடிந்த கோவா – பெங்களூரு ஆட்டம்!!

7 வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் பாம்போலிம்மில் உள்ள ஜி.எம்.சி. தடகள ஸ்டேடியத்தில் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்தியாவின் பல இடங்களில் நடைபெறும் போட்டியானது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவாவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு நடைபெற்ற 3 வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா, மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மிகவும் சிறப்பாக விளையாடி விறுவிறுப்பினை அதிகரித்தன.

ஐ.எஸ்.எல். கால்பந்து : சமநிலையில் முடிந்த கோவா - பெங்களூரு ஆட்டம்!!

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் 27 வது நிமிடத்தில் கிளைடான் சில்வா ஒரு கோல் போட்டார். அதனைத் தொடர்ந்து 57 வது நிமிடத்தில் பெங்களூரு அணி சார்பில் வீரர் ஜூவானன் மீண்டும் ஒரு கோல் போட்டார்.

இதனால் பெங்களூரு அணி  2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருக்க வெறித்தனமாக ஆடத் துவங்கிய கோவா அணி 66 மற்றும் 69 வது நிமிடங்களில் கோவா வீரர் இகோர் அங்குலோ கோல் போட்டார்.

இறுதியில் இந்த ஆட்டமானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையானது.

Related posts

மரடோனாவுக்கு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திவரும் பொதுமக்கள்..!!

TamilSportsNews

என்னுடைய தவறு குறித்து நான் பொறுப்பு ஏற்கிறேன்.. பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளிவைத்த மெஸ்சி

TamilSportsNews

ஆக்ரோஷமான ஆட்டம்.. தொடர் கோல்களைப் போட்ட மும்பை அணி…

TamilSportsNews

Leave a Comment