Cricket

குடும்பத்துடன் நெட்பிளிக்ஸில் படம் பார்க்கிறார் கங்குலி… மனைவி டோனா பேட்டி!!

கொரோனா வைரஸ் சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளை அடுத்து தற்போது இந்தியாவிலும் தலைவிரித்து ஆடுகிறது.

கொரோனா வைரஸினை அடுத்து இந்தியா- தென் ஆப்ரிக்கா இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்து மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

அடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பையும் இந்த வருட இறுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள், பிசிசிஐ ஊழியர்கள் என அனைவரும் ஓய்வில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிசிசிஐ தலைவராக எப்போதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் சவுரவ் கங்குலி வீட்டில் தற்போது எவ்வாறு நேரத்தினை செலவிட்டு வருகிறார் என்பது குறித்து அவரது மனைவி டோனா கூறியுள்ளார்.

குடும்பத்துடன் நெட்பிளிக்ஸில் படம் பார்க்கிறார் கங்குலி… மனைவி டோனா பேட்டி!!

கங்குலி மனைவி டோனா கூறியதாவது ‘‘நான் இதுபோன்று ஓய்வு கொண்டு வீட்டில் இருக்கும் கங்குலியை அவ்வளவாகப் பார்த்ததில்லை. வருடம் முழுவதும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பார்.

அவர் காலையில் தாமதமாக எழுந்திருத்தல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்தல், படம் பார்த்தல், குழந்தைகளுடன் உரையாடுதல் என்று இருந்து வருகிறார்.

நெட்பிளிக்ஸில் நேற்று தி பிரேக்-அப்,  இன்று ஆர்ட்டிக்கிள் 15 படங்களைப் பார்த்தோம். கங்குலியுடன் இணைந்து நாங்கள் எல்லோரும் படம் பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Related posts

அஸ்வினுக்கு வாய்ப்பு… இறுதிப்போட்டிக்குள் தமிழக அணி!!!

TamilSportsNews

டெஸ்ட் கிரிக்கெட் விதியை மாற்றினால் பெயரையும் ஈசி கிரிக்கெட்டுன்னு மாற்றுங்க… பென் ஸ்டோக்ஸ் கருத்து!!

TamilSportsNews

உங்க லெவலே வேற… நடுங்க வெச்சிட்டீங்க.. இந்தாங்க ஆட்ட நாயகன் விருது!!

TamilSportsNews

Leave a Comment