Cricket

முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!!

மவன்ட் மவுங்கானுயில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் சதத்தினைக் கடந்து 129 ரன்கள் எடுத்து இருந்தது.

அடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்க்சைத் துவக்கிய் ஆடிய நிலையில் 239 ரன்களில் அவுட் ஆனதுது. அடுத்து நியூசிலாந்து அணி 2 வது இன்னிங்சினைத் துவக்கி பேட்டிங் செய்தநிலையில் டாம் லாதம் 53 ரன்களும், டாம் பிளன்டல் 64 ரன்களும் எடுத்து இருந்தனர்.

முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் அணியை 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி!!

180 ரன்களுடன் நியூசிலாந்து 2 வது இன்னிங்சை டிக்ளேர் செய்ய, அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி சார்பில் அசார் அலி 34 ரன்களுடனும், ஃபவத் அலாம் 21 ரன்களுடனும் களத்தில் இருக்க 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் அசார் அலி 38 ரன்களில் அவுட் ஆக, ஃபவத் அலாம் – முகமது ரிஸ்வான் ஜோடி  சிறப்ப விளையாடிய நிலையில், ரிஸ்வான் 60 ரன்களிலும், ஃபவத் அலாம் சதத்தினை விளாசி 102 ரன்களிலும் அவுட் ஆக, யாசிர் ஷா  ரன் ஏதும் எடுக்காமலும், முகமது அப்பாஸ் 1 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அடுத்து நசீம் ஷா அவுட் ஆக, நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 101 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related posts

மீண்டும் களமிறங்கும் தோனி… ரசிகர்கள் குதூகலம்!!!

TamilSportsNews

ஒருத்தருக்குத்தான் சான்ஸ்… ஆண்டர்சன், பிராட் ரெண்டு பேரும் ஒண்ணா ஆட முடியாது!!

TamilSportsNews

பிரைன் லாராவின் பிறந்தநாள்… ஐசிசி வெளியிட்ட சாதனை வீடியோ!!

TamilSportsNews

Leave a Comment