Cricket

ரசிகர்கள் என்னை கொரோனா பரிசோதனை ராணி என்று அழைக்கின்றனர்.. பஞ்சாப் அணி நிர்வாகி பிரீத்தி ஜிந்தா பேட்டி!!

13 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியானது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பயோ பபுள் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் பஞ்சாப் அணியின் நிர்வாகியான பிரீத்தி ஜிந்தா மைதானத்தில் உள்ள வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மைதானத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

பிரீத்தி ஜிந்தா கூறுகையில், ‘‘ஐபிஎல் போட்டியானது பயோ பபுள் முறையில் நடைபெற்று வருகின்றது, வீரர்களின் பயோ பபுள் அனுபவம் குறித்துப் பலரும் என்னிடம் கேட்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டேன். அதன்பின்னர் ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ரசிகர்கள் என்னை கொரோனா பரிசோதனை ராணி என்று அழைக்கின்றனர்.. பஞ்சாப் அணி நிர்வாகி பிரீத்தி ஜிந்தா பேட்டி!!

மேலும் ஹோட்டல் அறையினைத் தவிர்த்து உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் என வேறு எங்கும் செல்லக்கூடாது. மேலும் மற்ற வெளிநபர்கள் யாரிடனும் பழகுதல், வெளி உணவுகள் சாப்பிடுதல் என அனைத்து விஷயங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான் எப்போதும் சுதந்திரமாக இருக்கும் நபர், உண்மையில் எனக்கு இது மிகவும் கடினமானதாகவே உள்ளது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே ஐபிஎல் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

உண்மையில் பிசிசிஐ மற்றும் மருத்துவக்குழுவினரின் அர்ப்பணிப்பிற்கு என்னுடைய பாராட்டுகள். நான் 20 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளதால் என்னை கொரோனா ராணி என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

Related posts

கோலி இப்போ இல்ல, எப்பவும் பெஸ்ட்தான்… வெங்சர்கார் பேட்டி!!

TamilSportsNews

தோனி என்னிடம் கெஞ்சினார்… நான் ஒருவழியாக சமாதானப்படுத்தினேன்… ஹைடன் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

கங்குலி மாட்டிக்கிட்டார்… நான் தப்பிச்சிட்டேன்… யுவராஜ் சிங் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment