Tennis

டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமான நிலையில், வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு இருக்கும் தீர்வாக ஊரடங்கே இருந்து வருகின்றது.

ஆனால் கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. சாதாரண மக்களோடு பிரபலங்கள் பலரும் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்தவகையில் பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அதாவது தற்போது விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், டென்னீஸ் வீரர் ஜோகோவிச் தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்க எண்ணி, அட்ரியா டூர் தொடரை நடத்தினார். அந்தத் தொடரில் போர்னா கோரிக் விளையாடினார்.

டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!!

அந்தத் தொடர் முடிந்து ஒரு வாரம் ஆனநிலையில் போர்னா கோரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது போர்னா கோரிக் ட்விட்டரில், ‘‘எனக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 15 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

என்னால் தொற்று ஏற்பட்டு இருப்பின் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், என் உடல்நலம் சிறப்பாகவே உள்ளது, தயவுகூர்ந்து யாரும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Related posts

தோனியுடன் மதிய உணவு சாப்பிட ஆசை… சானியா ஓப்பன் டாக்!!

TamilSportsNews

விம்பிள்டன் போட்டி தரவரிசையில் பெடரருக்கு 2-வது, நடாலுக்கு 3 வது இடம்

TamilSportsNews

மேடையில் கண்ணீர்.. ஓய்வினை அறிவித்த வோஸ்னியாக்கி

TamilSportsNews

Leave a Comment