Football

உலக கோப்பை கால்பந்தில் அடுத்த சுற்றுக்கு தகுதியான இங்கிலாந்து & ஜப்பான்

மகளிர் உலகக் கோப்பை 8 வது ஆட்டம் பிரான்சில் நடந்து வருகிறது, உலகெங்கிலும் உள்ள 24 அணிகள் ஒரு சாம்பியன்ஷிப்பிற்காக போட்டியிட உள்ளன. ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 7 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

2019 ம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பையை முதல் தடவையாக பிரான்ஸ் இந்தப் போட்டியை நடத்துகிறது.

 மூன்றாவது முறையாக இது ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி பிரான்சில் ஒன்பது வெவ்வேறு நகரங்களில் பாரிசிலிருந்து நைஸ் வரை நடக்கும், பின்னர் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் லியோனில் நடைபெறும்.

உலக கோப்பை கால்பந்தில் அடுத்த சுற்றுக்கு தகுதியான  இங்கிலாந்து & ஜப்பான்

இதில் ‘டி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து அணியை ஜப்பான் அணி எதிர்கொண்டது. தொடக்கம் முதலே மிகக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இங்கிலாந்து அணி. ஆனால் இங்கிலாந்தினை சமாளிக்க முடியாமல் ஜப்பான் போராடியது. கடைசுவரை ஜப்பானால் ஒருகோல் கூட போட முடியவில்லை. இதன் மூலம் 2–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

 இங்கிலாந்து அணியில் எலென் ஒயிட் 14–வது நிமிடத்தில் முதல் கோலையும் 84–வது நிமிடத்தில் 2 வது கோலையும் அடித்தனர். இதேபிரிவில் மோதிய அர்ஜென்டினா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஆட்டத்தில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டதனால் அதாவது 3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

லீக் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 9 புள்ளிகள் பெற்றும், ஜப்பான் 4 புள்ளிகள் பெற்றும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

Related posts

ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள லா லிகா கால்பந்து போட்டிகள்!!

TamilSportsNews

2 கோல்கள் போட்ட ஹியூகோ பவுமஸ்… கேரளாவை வீழ்த்திய கோவா!!

TamilSportsNews

4 கோல் பாஸ்… அரையிறுதியில் மாஸ் காட்டிய சென்னை அணி.. பரிதவித்த கோவா அணி!!

TamilSportsNews

Leave a Comment