இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.
தற்போது அந்தப் போட்டியில் 1 டெஸ்ட் போட்டியானது குறைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கங்குலியின் அறிவிப்பில், “இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது, இந்தப் போட்டி அட்டவணையில் தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது 5 டெஸ்ட் போட்டி கொண்ட அட்டவணையில் ஒரு டெஸ்ட் போட்டியினைக் குறைத்து 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடத்தப்படும். ஆனால் அதற்கு பதிலாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 2 ஆட்டங்கள் கூடுதலாக இருக்கும். இந்த தொடரானது பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.