Cricket

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி!!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதுடன் முதலில் பேட்டிங்க் செய்தது பாகிஸ்தான் அணி.

அதாவது பாகிஸ்தான் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக இங்கிலாந்து அணிக்கு பெரிய அளவில் சவால் கொடுத்தனர். அதாவது பாகிஸ்தான் அணியினைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஷான் மசூத் 151 ரன்கள் எடுத்தனர், அதன்படி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 219 ரன்கள் எடுத்து அவுட் ஆனது, அடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் 2 வது இன்னிங்சை ஆடியது.

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி!!

இதன்படி நேற்றைய 3 வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தடுமாறியதில் இருந்து திரும்ப மீண்டு வந்தது, அதன்படி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாறுமாறாக இருந்தது. அதாவது பாகிஸ்தான் இங்கிலாந்து அனியின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 169 ரன்களுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.

அடுத்து  277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இங்கிலாந்து அணி துவக்கத்தில் தடுமாறினாலும்,  கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் சிறப்பான விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.  

இதனால், இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Related posts

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டமா? இவர் இருக்கிற வரை கனவில கூட நடக்காது…. பாகிஸ்தான் வீரர் அப்ரிடி கோபம்!!

TamilSportsNews

ரீல் தோனியின் மரணம் குறித்து ரியல் தோனி வருத்தம்!!

TamilSportsNews

தோனிக்கு அப்புறம் இவரும் இதை செஞ்சி இருக்கார்.. திசாரா பெரேரா செஞ்சதைப் பாருங்க!!

TamilSportsNews

Leave a Comment