Cricket

அனுஷ்கா சர்மாவின் எடுபிடிதான் தேர்வுக் குழு…. விளாசிய பரூக் இன்ஜினியர்!!!

இந்திய கிரிக்கெட் அமைப்பு வரலாறு காணாத அளவில் சாதனைகளை செய்து வருகிறது, அதாவது இந்தத் தேர்வு குழு இந்திய வரலாற்றில் இல்லாத அளவு மிக மோசமான தேர்வுக் குழு என்று பெயர் பெற்றுள்ளது.

தேர்வுக் குழுவின் தலைவரான எம்எஸ்கே பிரசாத்தை தவிர, மற்ற உறுப்பினர்கள் பற்றி ரசிகர்களுக்கு கூட தெரியாது. இவர்களின் அனுபவம் மிக மிக குறைவு, மிகக் குறைவான சர்வதேச போட்டிகளில் விளையாடியதாலோ, என்னவோ இவர்கள் சொந்தமாக இதுவரை முடிவு எடுத்ததாக தெரியவில்லை.

அனுஷ்கா சர்மாவின் எடுபிடிதான் தேர்வுக் குழு…. விளாசிய பரூக் இன்ஜினியர்!!!

அணியில் எந்த வீரர் இடம்பெறுவார் என்பது குறித்த விஷயங்களை மட்டுமன்றி, அனைத்து விஷயங்களையும் கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரியின் இறுதிக்கட்ட ஆலோசனையின்படியே எடுக்கின்றனர்.

இங்கிலாந்தில் ஜீலை மாதம் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி இறுதிப் போட்டி வாய்ப்பினைக் கூட பெறவில்லை.

அப்போது இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றனர், மேலும் கோலி தன்னுடைய அனுஷ்கா சர்மாவை அங்கே அழைத்துவந்து, அவர்களுடன் நேரம் ஒதுக்குவதிலேயே மனச் சிதறல் ஏற்பட்டது என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.

அந்தவகையில், தற்போது தேர்வுக் குழுவினர் கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு டீ கொடுக்கும் வேலையை மட்டுமே சிறப்பாக செய்தார்கள் என பரூக் இன்ஜினியர் கூறியுள்ளார்.

அனுஷ்கா சர்மா குறித்த விஷயங்களுக்கு ரசிகர்கள் வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related posts

தூள் கிளப்பிய ஷுப்மான் கில், விஹாரி… வேஸ்ட்டா போச்சே.. இந்தியா ஏ அணி தோல்வி

TamilSportsNews

சிக்ஸ் அடிக்கிறவங்கதான் ஓடிப்போய் பந்தை எடுத்து வரணும்.. சாஹல் சொன்ன ஐடியா!!

TamilSportsNews

வேறு வழியின்றி என்னை அணியில் வைத்திருந்தனர்… தோனியை சாடியுள்ள யுவராஜ் சிங்!!

TamilSportsNews

Leave a Comment