Tennis

அமெரிக்க ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்ற டொமினிக் தீம்!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் இருந்து வந்தது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறாமல் இருந்து வந்தது.

தற்போது பயோ பபுள் முறையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தப் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு எதிராகக் களம் இறங்கினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஸ்வெரேவ் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ஸ்வெரேவ் போராடிய நிலையில் இரண்டாவது செட்டை  6-4  என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அடுத்து மூன்றாவது செட்டினைப் பொறுத்தவரை டொமினிக் தீமின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது, அதன்பயனாக அவர் 3 வது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.  அடுத்து 4வது செட்டையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

5 வது செட்டில் மீண்டு டொமினிக்0 தீம் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 5 வது செட்டையும் 7-6  என்ற கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என்ற கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார், அதன்மூலம் டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் வென்றார்.

Related posts

இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை… ரபெல் நடால் கருத்து!!

TamilSportsNews

பர்ஸ்ட்டு இத பண்ணனும்.. அப்புறம் அத பத்தி யோசிக்கலாம்.. சொல்கிறார் ரோஜர் பெடரர்

TamilSportsNews

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : அரைஇறுதிக்கு முன்னேறினார் போடோரோஸ்கா!!

TamilSportsNews

Leave a Comment