Tennis

ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் கால் பதித்தார் டொமினிக் தீம்!!

ஏ.டி.பி. என்று அழைக்கப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகின்றது.

இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றினைப் பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்,

இந்தப் போட்டியின் நேற்றைய அரை இறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் செர்பியா ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் ஆகிய இருவரும் களம் இறங்கினர்.

முதல் செட்டினைப் பொறுத்தவரை ஜோகோவிச் – டொமினிக் தீம் இருவரும் தாறுமாறாக விளையாடினர். அதாவது முதல் செட்டைப் பொறுத்தவரை 5-5 என்ற கணக்கில் இருந்த சமநிலையினை டொமினிக் தீம் முறியடித்து 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதன்பின்னர் இரண்டாவது செட் சமநிலை ஆகவிருந்த நிலையில் ஜோகோவிச் 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அதன்பின்னர் 3 வது செட்டும் சமநிலை ஆகலாம் என இருந்தநிலையில் டொமினிக் தீம் 7-6 என்ற கணக்கில் 3 வது செட்டைக் கைப்பற்றினார்.

இதன்படி டொமினிக் தீம் 7-5, 6-7, 7-6  என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் டொமினிக் தீம் இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளார்.

Related posts

பிளாய்டு மரணத்துக்கு நீதி வேண்டும்… நவோமி ஒசாகா!!

TamilSportsNews

பாதுகாப்பாக ரம்ஜான் கொண்டாடுங்கள்… சானியா மிர்சாவின் வாழ்த்துகள்!!

TamilSportsNews

சாம்பியன் பட்டத்தினை வெல்லும் முனைப்பில் செரினா வில்லியம்ஸ்

TamilSportsNews

Leave a Comment