Tennis

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும்… ஜோகோவிச்சின் பயிற்சியாளர் இவானிசெவிச் ட்வீட்!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

அந்தத் தொடருக்குப் பின்னர் போர்னா கோரிக்,  விக்டர் டிரோய்க்கி, டிமிட்ரோவ் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2 தினங்களுக்கு முன்னர் ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.

கொரோனா தொற்று காரணமாக, இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவரது பயிற்சியாளர் இவானிசெவிச்சுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும்… ஜோகோவிச்சின் பயிற்சியாளர் இவானிசெவிச் ட்வீட்!!

இதுகுறித்து இவானிசெவிச் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது, “நான் சுற்று கண்காட்சி டென்னிஸ் போட்டிக்குப் பின்னர் 10 நாட்களில் நான் 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். மேலும் பரிசோதனை முடிவில் கொரோனா இல்லை என்று முடிவு வந்தது.

 தற்போது 3 வது முறையாக நடத்தப்பட்ட சோதனையில் எனக்கு கொரோனாத் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதநிலையில், கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் கடந்த 2 வார காலங்களில் என்னை சந்தித்தவர்கள் கூடுதல் கவனத்துடனும், மேலும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். நான் தனிமைப்படுத்துதலை தீவிரமாகக் கடைபிடித்து வருகிறேன்.” என்று கூறியுள்ளார்.

Related posts

சாதனை படைத்த ஆஷ்லி பார்டி

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ் குறித்து ஜூன் மாத இறுதிக்குள் முடிவு எடுத்துடுவோம்… தலைமை நிர்வாகி பேச்சு!!

TamilSportsNews

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் பெடரரை வீழ்த்திய நடால்

TamilSportsNews

Leave a Comment