Tennis

இத்தாலி ஓபன் டென்னிஸ்.. அரைஇறுதி வாய்ப்பினைப் பெற்றார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியானது தற்போது ரோமில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியினைப் பொறுத்தவரை ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டமானது நேற்று நடைபெற்றது, அந்த கால்இறுதி ஆட்டத்தில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் ஜெர்மனி வீரர் டொமினிக் கோப்பெருக்கு எதிராகக் களம் இறங்கினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ்.. அரைஇறுதி வாய்ப்பினைப் பெற்றார் ஜோகோவிச்

துவக்கம் முதலே ஆட்டமானது மிகவும் பரபரப்பாக நடைபெற்றது, மேலும் முதல் செட்டில் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்திய நிலையில் டொமினிக் திணறிபோக 6-3 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். மேலும் இரண்டாவது செட்டில் டொமினிக் அதிரடியாக ஆடி 4-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை இழந்தார்.

பின்னர் மீண்டும் வெறித்தனமாக ஆடிய ஜோகோவிச், 6-3 என்ற செட் கணக்கில் 3 வது செட்டைக் கைப்பற்றினார். இறுதியில் ஜோகோவிச் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் டொமினிக் கோப்பெரை தோற்கடித்தார், அதன்மூலம் அரைஇறுதி வாய்ப்பினைப் பெற்றார்.

Related posts

சாம்பியன் பட்டத்தினை வெல்லும் முனைப்பில் செரினா வில்லியம்ஸ்

TamilSportsNews

விம்பிள்டன் டென்னிஸில் 3-வது சுற்றில் பெடரர், செரீனா

TamilSportsNews

விம்பிள்டன் டென்னிஸில் கால் இறுதிக்கு முன்னேறிய செரினா

TamilSportsNews

Leave a Comment