Cricket

அன்று இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை – பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியினைப் பொறுத்தவரையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்தபின்னர் பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது, “எங்களுடைய ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் இதய துடிப்பு முந்தைய முறையினைவிட எகிறுகிறது. இந்த ஆட்டமானது 19-வது ஓவரிலேயே வெற்றியுடன் முடித்தது உண்மையில் மகிழ்ச்சியான விஷயமாகும்.

மேலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் நடைபெற, அதில் வெற்றி கண்டது கூடுதல் மகிச்சியினைக் கொடுத்தது, மேலும் இதுபோன்ற நெருக்கடியான சூழலுக்கு ஆட்படாமல் போட்டியினை சிறப்பாக முடித்துவிடுவது நல்லது என நினைத்தேன்.

அன்று இரவு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை - பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பேட்டி

சூப்பர் ஓவருக்குச் செல்லாத வகையில் விளையாட வேண்டும் என நினைத்து அன்று இரவு நீண்ட நேரம் தூங்கவில்லை.

அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் போட்டியை 19 ஓவரில்  முடிக்க பெரிய அளவில் உதவிகரமாக இருந்தனர். பந்துவீச்சினைப் பொறுத்தவரையில் முகமது ஷமி கடும் சவாலாக விளங்குகிறார்.

அதேபோல் பேட்டிங்கினைப் பொறுத்தவரையில் மேக்ஸ்வெல் நன்றாக பேட்டிங் செய்தார். உண்மையில் அவருக்கு நாங்கள் ஆதரவாக இருக்க நினைக்கிறோம்” என்றார்.

Related posts

இப்படி பேசாதீங்க… அவரு எவ்வளவோ பண்ணி இருக்கார்… ஷமி கோபம்!!

TamilSportsNews

அப்பாடா.. ஒரு வழியா ரிலீஸ் பண்ணீட்டாங்க… ஐபிஎல் 2020 அட்டவணை!!

TamilSportsNews

வெச்சு வெச்சு செய்த மழை… அரைஇறுதிக்குள் தமிழ்நாடு, சத்தீஷ்கார்!!

TamilSportsNews

Leave a Comment