Cricket

தோனியின் ஷாட்டுகள் வேற லெவல்.. ஐபிஎல் பயிற்சி ஆட்டம் குறித்து சொன்ன சுரேஷ் ரெய்னா!!

தோனி சில மாதங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் விளையாடும் பொருட்டு, சென்னையில் உள்ள மைதானத்தில் களம் இறங்கி பயிற்சியில் ஈடுபட்டார். அவரது பயிற்சியானது வேறு லெவலாக இருந்ததாக செய்திகள் வெளியாகின.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரருமான சுரேஷ் ரெய்னா, தோனியின் உடல்தகுதி பிரமாதமாக இருந்தது என்று சமீபத்தைய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அதாவது, “கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் பலவும் நடைபெறவில்லை. அந்தவகையில் 13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

தோனியின் ஷாட்டுகள் வேற லெவல்.. ஐபிஎல் பயிற்சி ஆட்டம் குறித்து சொன்ன சுரேஷ் ரெய்னா!!

ஐபிஎல் போட்டிக்காக சில மாதங்களுக்கு முன்னர் சிஎஸ்கே வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டோம். மைதானத்தினைவிட, உடல்தகுதியினை மேம்படுத்தும் பொருட்டு, தோனி, உடற்பயிற்சி கூடத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடற்பயிற்சிகள் மேற்கொண்டார்.

அதன் பிறகு மைதானத்தில் 2 முதல் 4 மணி நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். அவரது ஷாட்டுகளும் என்னை பிரமிக்க வைத்தன. உடல்தகுதியினை சிறப்பாகக் கொண்டிருந்தார். அடிக்கும் வெயிலில் பல மணி நேரம் தொடர்ச்சியாக பயிற்சி செய்தார்.

நான் பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோதிலும், இத்தகைய உத்வேகத்தினைப் பார்த்ததில்லை,” என்று கூறியுள்ளார்.

Related posts

வினோத்ராய் கமிட்டி இன்றுடன் முடிவு… புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!!!

TamilSportsNews

அய்யோ முடியலப்பா சாமி… இலங்கைக்கு நெருக்கடி கொடுத்த பந்துவீச்சாளர்கள்… ஈசியா ஜெயிச்ச இந்தியா!!

TamilSportsNews

காட்டு காட்டுன்னு காட்டிய முரளி விஜய்… அபராதம் விதித்த கிரிக்கெட் போர்டு!!

TamilSportsNews

Leave a Comment