Tennis

தோனியுடன் மதிய உணவு சாப்பிட ஆசை… சானியா ஓப்பன் டாக்!!

சானியா மிர்சாவுக்கு 2018 ஆம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஓய்வில் இருந்த சானியா மிர்சா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் எதுவும் நடைபெறாத சூழ்நிலையில், பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகின்றனர். அந்தவகையில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டோருக்கு தினசரிக்கு உணவு வழங்கி வருகிறார்.அதேபோல் தன்னார்வலர்கள் சிலருடன் இணைந்து கொரோனாவுக்கு எதிரான பிரதமர் நிவாரண நிதிக்கு 1.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

சாலையோரத்தில் வசிக்கும் மனிதர்கள், முதியோர்கள், ஏழைகள், தினக்கூலிகள் என இதுவரை 10 ஆயிரம் பேருக்கு உணவு அளித்துள்ளார்.

தோனியுடன் மதிய உணவு சாப்பிட ஆசை… சானியா ஓப்பன் டாக்!!

சமூக வலைதளங்களில் தற்போது ஆக்டீவாக இருந்துவரும் சானியாவிடம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம்  மூலம் உரையாடினர், அப்போது அவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர்.

அந்தவகையில் உங்களுக்குப் பிடித்த எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்க, சானியாவோ சற்றும் தயங்காமல் தோனி என்று பதில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, “தோனியின் மிகப் பெரிய ரசிகை நான், அவருடைய ஆட்டம் நடக்கும் அனைத்துப் போட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடுவேன். தோனியிடம் பெரிய அளவில் நெருக்கமான நட்பு இல்லை என்றாலும், அவ்வப்போது பார்க்கும்போது கொஞ்சம் பேசி இருக்கிறேன்.

அவருடன் மதிய உணவு சாப்பிட நினைக்கிறேன். ஒரு ரசிகையாக அவரது கிரிக்கெட் ஆட்டத்தை எதிர்பார்த்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

10 வயசுதாங்க… இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வாங்கிட்டு வந்துட்டார்!!

TamilSportsNews

ஆக்ரோஷமான ஆட்டம்.. வலுவான அந்த வீரர்கள்.. இறுதிப் போட்டிக்குள் டொமினிக் தீம்

TamilSportsNews

ஆந்திரா, தெலுங்கானாவிற்கு பிவி சிந்து ரூ. 5 லட்சம் நிவாரண உதவித்தொகை!!

TamilSportsNews

Leave a Comment