Cricket

வயது முதிர்ந்தவர் போல் தோற்றமளிக்கும் தோனி.. வைரலாகும் புகைப்படம்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு நிகரான ரசிகர்களைக் கொண்டவர் என்றும் சொல்லலாம்.

தோனி மற்ற கேப்டன்களைவிட, மிகவும் நிதானமாக செயல்படுபவர் என்பதால் அவரை கூல் கேப்டன் என்று ரசிகர்கள் அழைத்தனர். மேலும் தோனியின் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் இருப்பதைப் போல் அவரது சிகை அலங்காரத்திற்கும் ரசிகர்கள் உண்டு.

அதாவது ஒவ்வொரு முறை களம் இறங்கும்போதும் புதுவகையான சிகை அலங்காரம் கொண்ட தோற்றத்துடன் காட்சியளித்து ரசிகர்களைக் குஷிப்படுத்துவது வழக்கம்.

வயது முதிர்ந்தவர் போல் தோற்றமளிக்கும் தோனி.. வைரலாகும் புகைப்படம்!!

சமீப காலமாக சர்வதேசப் போட்டிகள் எதிலும் பங்கேற்காத நிலையில், வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகின்றார். ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் நடக்காமல் போயிற்று.

அவ்வப்போது இவர் குறித்த வீடியோக்கள் வெளியாவது வழக்கம் அந்தவகையில் சமீபத்தில், மகளுடன் பைக்கில் செல்லுதல், நாய்க்கு பவுலிங்க் பயிற்சி அளிப்பது, பறவைக்கு உணவு அளிப்பது எனப் பல புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

அந்தவகையில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சற்று வயது முதிர்ந்தவர் போல் தோனி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோலி ரோகித் சர்மா ஆட்டம் வேற… சச்சின்-கங்குலி ஆட்டம் வேற… கம்பேர் பண்ணாதீங்க இயான் சேப்பல் பதிவு!!

TamilSportsNews

சதத்தை நழுவ விட்டது வருத்தமளிக்கிறது- ரஹானே

TamilSportsNews

ஆட்டத்தை தள்ளி வைக்கணும்… கோரிக்கை விடுத்த வங்காளதேசம்.. ஓகே சொன்ன பாகிஸ்தான்

TamilSportsNews

Leave a Comment