Cricket

ஆன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ள தோனி.. ரசிகர்கள் ஏகபோக குஷி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களைக் கொண்டவராகவும் சிறப்பான கேப்டன் என்ற பெயரைப் பெற்றவராகவும் இருந்து வருகிறார். இந்திய அணி 2 உலக கோப்பை வென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டி வழக்கமான போட்டியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டாலும், அதன்பின்னர் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது அவர்களுக்குத் தெரியாது. அதாவது உலகக்கோப்பைக்குப் பின்னர் இவர் இன்னும் களம் திரும்பவில்லை என்றே சொல்லலாம்.

ஆன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்துள்ள தோனி.. ரசிகர்கள் ஏகபோக குஷி!!

பிசிசியின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இவர் நீக்கப்பட்டதுடன் இவரது ஓய்வு குறித்த தகவல் இன்னும் மர்மமாகவே உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் களம் இறங்குவார் என நினைத்தநிலையில்  கொரோனா ஊரடங்கால் ஐ.பி.எல்.போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் தோனி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்தநிலையில் இன்று முதல் ஆன்லைன் மூம் இளம் வீரர்களுக்கு பயிற்சியினைத் துவக்கியுள்ளார். அதாவது பயிற்சி மையமானது துவக்கப்பட்டு தோனி தலைமையில் பயிற்சி நடைபெற்றுள்ளது.

Related posts

கொரோனா பத்தி கவலை வேண்டாம்… ஐபிஎல் நிச்சயம் நடக்கும்.. பிசிசிஐ அறிவிப்பு!!

TamilSportsNews

32 ரன்களில் 3 விக்கெட் இழப்பு… தடுமாறும் இங்கிலாந்து.!!

TamilSportsNews

இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி ஆல்-அவுட்

TamilSportsNews

Leave a Comment