Cricket

விவசாயியாக மாறிய தோனி… வைரலாகும் வீடியோ… ரசிகர்கள் வாழ்த்து!!

நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் தோல்வியுற்ற பின்னர், தோனி எந்தவொரு தொடரிலும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இவர் தனது குடும்பத்தினருடன் தனது நேரத்தினை செலவிட்டு வருகிறார், அவர் குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விடும்.

அந்த வகையில் தோனி குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விவசாயியாக மாறிய தோனி… வைரலாகும் வீடியோ… ரசிகர்கள் வாழ்த்து!!

அதாவது, அவர் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடும் விதைகளை விவசாய நிலத்தில் விதைப்பது போன்றும், விதைகளுக்கு ஊதுபத்தி ஏற்றி, தேங்காய் உடைத்து கடவுளை வணங்குவது போலவும் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தர்ப்பூசணி விவசாயம் துவங்கியது குறித்தும், பப்பாளி நடவு செய்யப்பட்டது குறித்தும் தோனி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் தோனியின் எண்ட்ரி குறித்து, எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்காக மார்ச் மாத துவக்கத்தில் இருந்து பயிற்சி செய்ய உள்ளதாக ஏற்கனவே அதிகாரப் பூர்வத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Related posts

தோற்க காரணம் கோலி போட்ட திட்டம்தான்… சர்ச்சைக்கு உள்ளான டுபிளெசிஸ்!!!

TamilSportsNews

நானும், கோலியும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ்… அக்தர் பேட்டி!!

TamilSportsNews

நான் மீண்டும் திரும்பணும்.. அதுக்காக என்னனாலும் செய்வேன்.. உமேஷ் யாதவ் பேட்டி!!

TamilSportsNews

Leave a Comment