Cricket

பகல் – இரவு ஆட்டம்…. இந்தூரில் தீவிர பயிற்சி செய்யும் வீரர்கள்!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் மற்றும், முதல் டெஸ்ட் தொடர் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

 டி 20 யினைப் பொறுத்தவரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின்னர் டெஸ்ட் போட்டியினைப் பொறுத்தவரை முதலாவது டெஸ்ட்டில் இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்து இந்தியா மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 22 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கவுள்ளது.

பகல் – இரவு ஆட்டம்…. இந்தூரில் தீவிர பயிற்சி செய்யும் வீரர்கள்!!

முத முறையாக பகல்- இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதால் இந்தூரில் உள்ள மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.

பயிற்சியினை பகலில் சிறிது நேரம் செய்த இந்திய அணி, அதன்பின்னர் மாலை  5 மணி முதல் 6 மணி வரை இருள் நிறைந்த சூழ்நிலையில் பயிற்சி செய்து ஆட்ட வியூகங்களை வகுத்துள்ளது.

வீரர்கள் பகல்- இரவு ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில், எதையும் பொருட்படுத்தாது கடின முயற்சிகள் செய்து வருகின்றனர்.

Related posts

கொரொனா போன்ற அபாயகரமான வைரஸை உலகம் பார்த்ததில்லை.. கங்குலியின் விழிப்புணர்வு வீடியோ!!

TamilSportsNews

இங்கிலாந்து அணியில் விளையாடும் தமிழக வீரர் அஸ்வின்

TamilSportsNews

சதம், இரட்டை சதம்… களைகட்டிய ஆட்டம்… ஒரே நாளில் 490 ரன்கள் எடுத்து சாதனை!!

TamilSportsNews

Leave a Comment