Cricket

108 நாட்கள் கழித்து வீடு திரும்பிய டேவிட் வார்னர்..!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் பொருட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து 3 மாதங்களுக்கு முன்னர் டேவிட் வார்னர் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தநிலையில் தற்போது  அவர் ஏறக்குறைய 108 நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.

அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கும் பொருட்டு, சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் தனிமைப்படுத்துதல், பயிற்சி, போட்டி என ஒரு மாத கால அளவு அங்கு இருக்க வேண்டியதாயிற்று.

108 நாட்கள் கழித்து வீடு திரும்பிய டேவிட் வார்னர்.. வைரலாகும் வீடியோ இதோ!!

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பொருட்டு கிளம்பினார்.

ஐபிஎல் போட்டியிலும் தனிமைப்படுத்தல், பயிற்சி, போட்டிகள் என 2 மாத கால அளவு இருக்க வேண்டியதாயிற்று. தற்போது ஐபிஎல் போட்டியானது முடிவடைய ஆஸ்திரேலியா சென்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர், தற்போது 108 நாட்கள் கழித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

108 நாட்கள் கழித்து மனைவி மற்றும் மகளைப் பார்த்த நிலையில், அவரது குழந்தைகள் டேவிட் வார்னரை ஓடிவந்து பாசத்துடன் கொஞ்சி வரவேற்றுள்ளனர். இந்த வீடியோவை  சமூக வலைதளங்களில் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பங்கேற்றுள்ளார்.

Related posts

சின்சினாட்டி டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச்!!

TamilSportsNews

ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வலியுறுத்திய கம்பீர்!!

TamilSportsNews

ஐ.பி.எல்லில் கூடுதல் நடுவர் முறை…. ஐ.பி.எல். நிர்வாகக் குழு முடிவு!!!

TamilSportsNews

Leave a Comment