Cricket

டி .நடராஜன் எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷன்.. ஹர்திக் பாண்ட்யா புகழாரம்!!

தமிழகத்தைச் சார்ந்த கிரிக்கெட் வீரர் டி .நடராஜனுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இதுகுறித்துப் பேசிய பாண்ட்யா டி.நடராஜனின் வாழ்க்கை எல்லோருக்கும் உத்வேகம் என்று கூறியுள்ளார்.

அதாவது 2015 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் அறிமுகமான டி.நடராஜன் 2018 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பிலும், 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் விளையாடினார்.

தற்போது இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நான்கு கூடுதல் பந்து வீச்சாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். முதல் சர்வதேசப் போட்டியில் முதல் விக்கெட்டாக மார்னஸ் லாபூசாக்னை அவுட் ஆக்கியுள்ளார்.

டி .நடராஜன் எல்லோருக்கும் இன்ஸ்பிரேஷன்.. ஹர்திக் பாண்ட்யா புகழாரம்!!

ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், “இந்திய அணி வெற்றிபெற பங்களிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நடராஜன் முதல் சர்வதேசப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து மிகப் பெரும் உயரத்தை அடைந்து பலருக்கும் உத்வேகமாக விளங்கி வருகிறார். அவரது வாழ்க்கை எல்லோருக்கும் உத்வேகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Related posts

பழிக்குப் பழி வாங்கியாச்சு… கோலி செஞ்சதைப் பாத்தீங்களா!!

TamilSportsNews

மிஸ் பண்ணிட்டோம்.. இப்படி செஞ்சிருக்கணும்… பொல்லார்ட் பேட்டி!!

TamilSportsNews

நாங்க கோட்டை விட்டுட்டோம்… இந்த முடிவு தப்பா இருக்குமோ… கோலி கருத்து

TamilSportsNews

Leave a Comment