Tennis

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா!!

பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக் கொரோனா வைரஸ் தொற்று  நேற்று உறுதியானது. அதேபோல் விக்டர் டிரோய்க்கி, டிமிட்ரோவ் போன்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது தற்போது விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், டென்னீஸ் வீரர் ஜோகோவிச் தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்க எண்ணி, அட்ரியா டூர் தொடரை நடத்தினார். அந்தத் தொடரில் போர்னா கோரிக்,  விக்டர் டிரோய்க்கி, டிமிட்ரோவ் ஆகியோர் விளையாடினர்.

அந்தத் தொடர் முடிந்து ஒரு வாரம் ஆனநிலையில் போர்னா கோரிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

இதில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் இந்தத் தொடரில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவ் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னுடன் நெருங்கி பழகியவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் மூவருக்கும் கொரோனா ஏற்பட்ட நிலையில், தற்போது ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதாவது அவர் கூறும்போது, ‘‘எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை சமீபத்தில் செய்த போது எங்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

Related posts

30 லட்சம் நன்கொடை… ஆஸ்திரேலியா காட்டூத் தீ குறித்து செரீனா சோகம்!!

TamilSportsNews

அடுத்த ஆண்டு போட்டியில் பெடரர், செரீனா இருவரும் பங்கேற்பார்கள்… ரிச்சர்ட் லீவிஸ் பேட்டி!!

TamilSportsNews

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் வெற்றி, பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி!!

TamilSportsNews

Leave a Comment