Cricket

கொரோனா நிவாரண நிதி: 59 லட்சம் நிதி உதவி வழங்கிய சுனில் கவாஸ்கர்!!

கொரோனா வைரஸ் தொற்றால் 14,84,811 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர் இழந்தோர் எண்ணிக்கையானது 88,500 ஐ நெருங்க உள்ளது. உலகின் பலநாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளையாட்டு வீரர்கள் இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய ஒலிம்பிக் சம்மேளனம், இந்திய ஹாக்கி வாரியம் உட்பட சச்சின், தோனி, கோலி, ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்க், ரகானே, சுரேஷ் ரெய்னா, ஆகியோர் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வழங்கியுள்ளனர்.

கொரோனா நிவாரண நிதி: 59 லட்சம் நிதி உதவி வழங்கிய சுனில் கவாஸ்கர்!!

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு 35 லட்சம் ரூபாயும், மகாராஷ்டிரா மாநில அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 24 லட்சமும் வழங்கியுள்ளார்.

தனிநபரைப் பொறுத்தவரை விளையாட்டுத் துறை சார்பில் இதுவரை கவுதம் கம்பீர் மற்றும் சுரேஷ் ரெய்னா  50 லட்சம் வழங்கியதே அதிகபட்ச தொகையாக இருந்த நிலையில் கவாஸ்கர் 59 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

வாட்டர் பாய் வேலை பார்த்த பிரதமர்….. உறைந்து போன வீரர்கள்!!!!

TamilSportsNews

என்னப்பா நீங்க.. சொதப்பித் தள்ளிய துவக்க வீரர்கள்.. 233 ரன்களுடன் படுத்துவிட்ட வங்காளதேசம்!!

TamilSportsNews

விவசாயியாக மாறிய தோனி… வைரலாகும் வீடியோ… ரசிகர்கள் வாழ்த்து!!

TamilSportsNews

Leave a Comment