Other Sports

பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸுக்கு கொரோனா பாசிட்டிவ்!!

சீனாவில் டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்துள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்து வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகமான நிலையில், வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைக்கு இருக்கும் தீர்வாக ஊரடங்கே இருந்து வருகின்றது.

பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸுக்கு கொரோனா பாசிட்டிவ்!!

ஆனால் கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. சாதாரண மக்களோடு பிரபலங்கள் பலரும் இத்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அந்தவகையில் பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

அதாவது கொரோனா தொற்றால் 2020 ஆம் ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் கடந்த மார்ச் மாதம் ரத்து செய்யப்பட்டன. ஜூன் மாதம் பாதுகாப்பான முறையில் பார்முலா1 கார்பந்தயம் தொடங்கியது.

தற்போது 3 சுற்றுப் பந்தயம் நிறைவடைந்துள்ளநிலையில், பார்முலா1 கார்பந்தய வீரர் செர்ஜியோ பெரேஸ் கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவர்  4 வது சுற்றில் பங்கேற்கவில்லை. அவரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Related posts

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி!

TamilSportsNews

உலக ஆக்கி தொடரில் இறுதி சுற்று போட்டிக்கு இந்தியா தேர்வு

TamilSportsNews

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள படகுப் போட்டி

TamilSportsNews

Leave a Comment