Tennis

பிரபல டென்னீஸ் வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கு கொரோனாத் தொற்று!!

பல்கேரியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் நட்சத்திரமான போர்னா கோரிக் கொரோனா வைரஸ் தொற்று  நேற்று உறுதியானது. அதேபோல் விக்டர் டிரோய்க்கி, டிமிட்ரோவ் போன்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அதாவது தற்போது விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், டென்னீஸ் வீரர் ஜோகோவிச் தொண்டு நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்க எண்ணி, அட்ரியா டூர் தொடரை நடத்தினார். அந்தத் தொடரில் போர்னா கோரிக்,  விக்டர் டிரோய்க்கி, டிமிட்ரோவ் ஆகியோர் விளையாடினர்.

அந்தத் தொடர் முடிந்து ஒரு வாரம் ஆனநிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல டென்னீஸ் வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளருக்கு கொரோனாத் தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் முடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர். இவர்களுக்கு உதவுவதற்காக காட்சி டென்னிஸ் தொடரை உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிச் நடத்தினார்.

இதில் கலந்து கொண்ட பல்கேரிய வீரர் டிமிட்ரோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.

இந்த நிலையில் ஜோகோவிச்சின் பயிற்சியாளரான இவானிசெவிச்சுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இவர் 2001 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார், தற்போது இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸில் பெடரர் 4-வது சுற்றுக்கு தகுதி

TamilSportsNews

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், ஜோகோவிச் 2 வது சுற்றுக்குத் தகுதி

TamilSportsNews

9வது விம்பிள்டன் பட்டத்தை வெல்வாரா பெடரர்?

TamilSportsNews

Leave a Comment