Football

மூடிய மைதானத்துக்குள் போட்டி… கொரோனா வைரஸால் இத்தாலி அரசு அதிரடி!!

சீனாவில் உற்பத்தியான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் தற்போது பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் பல வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முடியவில்லை.

சீனாவில் 2700 பேர் உயிர் இழந்துள்ளநிலையில், சீனாவைத் தாண்டி இத்தாலியில் இந்த வைரஸ் பெரிய அளவில் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இத்தாலியில் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி அரசு பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, கட்டுக்குள் கொரோனோ வைரஸினைக் கொண்டு வர முடியவில்லை என்றால், இதன் பாதிப்பு தீவிரமாகும் என்பதால், இத்தாலி அரசு பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மூடிய மைதானத்துக்குள் போட்டி… கொரோனா வைரஸால் இத்தாலி அரசு அதிரடி!!

அதாவது தற்போது நடைபெறவிருக்கிற விளையாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதாக இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் இத்தாலியின் முதன்மையான கால்பந்து லீக்கான செர்ரி ஏ தொடர் மார்ச் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த லீக்கானது ஐந்து போட்டிகள் கொண்ட ஆட்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இத்தாலி அரசு ஒரு திடீர் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது, அதாவது இந்த போட்டியானது மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என்றும், ஒளிபரப்பு உரிமை பெற்ற டி.வி. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

Related posts

கோல் மழை… மீண்டும் ஃபர்ஸ்ட் இடத்துல கோவா!!

TamilSportsNews

பய புள்ளைங்க மாஸ் காட்டிருச்சுங்க… இறுதிப் போட்டிக்குள் சென்னை அணி…

TamilSportsNews

அடிச்சு பிடிச்சு 1 கோல் போட்டாச்சு.. அப்பறம் ஒண்ணுமில்ல… மும்பை சிட்டி எப்.சி வெற்றி

TamilSportsNews

Leave a Comment