Cricket

தோனியின் ஓய்வு குறித்த திட்டத்தை போட்டு உடைத்த வர்ணனையாளர்!!

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதியில் தோல்வியுற்ற பின்னர், எந்தவொரு சர்வதேச தொடரிலும் தோனி பங்கேற்கவில்லை. மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் தோனி தனது திறமையினை நிரூபித்து மீண்டும் சர்வதேச அணிக்குள் கால் பதிப்பார் என்று கூறப்பட்டு வந்தது.

ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே வீரர்களுடன் தோனி பயிற்சியினைத் துவக்கிய நிலையில், கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டன, இந்தநிலையில் தற்போது அந்தப் போட்டிகள் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது.

தோனியின் ஓய்வு குறித்த திட்டத்தை போட்டு உடைத்த வர்ணனையாளர்!!

ஐபிஎல் போட்டிக்குப் பின்னர்  தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவாரா? இல்லையா? என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது அந்தக் கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “கோலியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது தோனியிடம் பேசினேன், அப்போது தோனி என்னிடம் அணியில் சிறப்பாக விளையாடும் சக வீரரை தோற்கடிக்கும் வரை கிரிக்கெட்டில் இருக்கும் அளவு உடல் தகுதியுடன் இருப்பதாக என்னை நான் தெரிந்து கொள்வேன் என்றார். ஐ.பி.எல். தொடரில் தோனியின் எண்ட்ரி குறித்துப் பலரும் காத்துக் கொண்டுள்ளனர்”என்று கூறியுள்ளார்.

Related posts

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 264 ரன்கள் குவித்தது

TamilSportsNews

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா

TamilSportsNews

இந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர் புஜாரா… பட்டம் சூட்டிய ஆஸ்திரேலிய வீரர்!!

TamilSportsNews

Leave a Comment