Cricket

ராயுடுவின் அரை சதத்தால் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

13 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியானது பெரும் ஆர்வத்திற்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் கண்டன.

சிஎஸ்கே அணியானது டாஸ் வென்றதுடன், பந்து வீச்சை தேர்வு செய்தனர். மும்பை அணி முதலில் பேட்டிங்க் செய்தது, மேலும் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. சவுரவ் திவாரி 42 ரன்களும், டி காக் 33 ரன்களும் எடுத்தனர்.

 அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியானது 163 ரன்கள் என்ற வெற்றி இலக்கினை நோக்கிக் களம் இறங்கியது.

ராயுடுவின் அரை சதத்தால் மும்பை அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

மேலும் சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை துவக்கம் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மிகவும் மோசமாக இருந்தது, அதாவது விஜய் 1 ரன்னிலும், வாட்சன் 4 ரன்னிலும் அவுட் ஆகினர்.

அதன்பின்னர் அம்பதி ராயுடு-  டூ பிளசிஸ் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அம்பதி ராயுடு அரை சதம் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில், சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராயுடு 71 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், டூ பிளசிஸ் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

Related posts

பொறுமை முக்கியம் பாஸ்… மத்ததெல்லாம் அப்புறம்தான்… விவிஎஸ் லட்சுமணன் கருத்து!!

TamilSportsNews

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள மாட்டார் ரவீந்திர ஜடேஜா!!

TamilSportsNews

துவங்கியது 5வது சுற்று.. 284 ரன்களுடன் மும்பை அணி.. களமிறங்க காத்திருக்கும் தமிழ்நாடு!

TamilSportsNews

Leave a Comment