Cricket

உமர் அக்மலின் தடைக்காலம் குறித்து அண்ணன் கம்ரன் அக்மல் கண்டனம்!!

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உமர் அக்மல். இவர் 2009 ஆம் ஆண்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

இவரின் சகோதரர்களான அட்னான் அக்மல் மற்றும் காம்ரான் அக்மல் ஆகியோரும் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளனர். 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் விளையாட இருந்த இவர் ஊழல் குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

உமர் அக்மலின் தடைக்காலம் குறித்து அண்ணன் கம்ரன் அக்மல் கண்டனம்!!

இதுகுறித்த விசாரணையானது நடத்தப்பட்டு வந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டு உண்மை என்பது தெளிவானது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு மூன்று ஆண்டுகள் தடைவிதித்தது. தற்போது இந்த தடையை எதிர்த்து அக்மல் மேல் முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை 18 மாதங்களாக குறைத்தார்.

இதுகுறித்துப் பேசிய உமர் அக்மலின் அண்ணன்  கம்ரன் அக்மல் கண்டனம், “இதுபோன்ற தவறு செய்தவர்களுக்கு முன்பு 3 முதல் 6 மாதங்கள் தான் தடை விதிக்கப்பட்டது. ஆனால் உமர் அக்மலுக்கு 18 மாதம் தண்டனை அளிக்கப்பட்டு இருப்பது கடினமான ஒன்றேயாகும்.

தவறை ஒப்புக்கொண்டபோதும் உமர் அக்மல் சரிவர  நடத்தப்படாதது வருத்தம் அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.

Related posts

இதுதான் தோனியின் இருக்கை… உணர்வு பொங்க சாஹல்… பிசிசிஐ வெளியிட்ட வீடியோ!!

TamilSportsNews

இனி ஷமிக்கு இந்த இடம் தான்.. கோலி எடுத்த அதிரடி முடிவு!!

TamilSportsNews

தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மோர்கனை கேப்டனாக்கணும்.. ரசிகர்கள் வலியுறுத்தல்!!

TamilSportsNews

Leave a Comment