Cricket

ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகம் இப்போதும் ஆதரவு அளிக்கிறது… விக்ரம் ரதோர் பேச்சு!!

இந்திய அணியில் விமர்சகங்களின் நாயகனாக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தோனியின் இடத்தினைப் பூர்த்தி செய்ய வைக்க பிசிசிஐ போராடி வருகிறது.

 ஆனால் ரிஷப் பந்த பல தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார், இதனால் இவர் மீதான விமர்சனம் குறைந்த பாடில்லை.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடியாக ஆடினார். ஆனால் மீண்டும் சொதப்ப, அதிக அளவிலான வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாத நிலையில், ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக களம் இறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகம் இப்போதும் ஆதரவு அளிக்கிறது… விக்ரம் ரதோர் பேச்சு!!

ரிஷப் பண்டுக்கு அணி நிர்வாகம் இப்போதும் ஆதரவாக அளிப்பதாய் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரதோர் கூறியுளார்.

அதாவது விக்ரம் ரதோர் கூறியதாவது, ‘‘ரிஷப் பந்த் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் தனக்கான வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து தங்களது ஆதரவினை அளித்து வருகிறது. அவர் சிறப்பாக விளையாடினால் இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கு நெருக்கடி குறையும்.

தோனியின் இடத்தை நிரப்புவது லேசான விஷயம் கிடையாது, ரிஷப் தொடர்ந்து சொதப்பி வருவதால் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் நிச்சயம் இந்த நெருக்கடியையும் அவர் கடப்பார்” என்று கூறியுள்ளார்.

Related posts

வார்னேவின் பந்து வீச்சில் அவுட் ஆனதால் அறையைப் பூட்டிக் கொண்டு அழுத சச்சின்!! விவிஎஸ் லக்‌ஷ்மண் பேச்சு!!

TamilSportsNews

ஓய்வு பெறும் கோலி…. கேப்டனான ரோகித் சர்மா!!

TamilSportsNews

மீண்டும் பயிற்சியாளராக தொடரும் ரவி சாஸ்திரி!

TamilSportsNews

Leave a Comment