Cricket

48 வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிசிசிஐ தலைவர் கங்குலி… ரசிகர்கள் வாழ்த்து!!

நேற்று முன் தினம் இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள்  அவரது ரசிகர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரைத் தொடர்ந்து நேற்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசியின் தலைவருமான் கங்குலியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்திய கிரிக்கெட்டினைப் பொறுத்தவரை சச்சினுக்கு அடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர் சவுரவ் கங்குலி. இவரது கேப்டன்ஷிப்பில், இந்திய அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமாக இருந்தவர் கங்குலி. மேலும் தான் கேப்டனாக இருந்த காலகட்டங்களில் இளம் வீரர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுத்தார்.

1992ம் ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையினைத் துவக்கினார் கங்குலி, இவரது துவக்க காலங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லையென்றாலும், அதன்பின்னர் சிறந்த வீரராக தன்னை நிரூபித்தார்.

48 வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிசிசிஐ தலைவர் கங்குலி… ரசிகர்கள் வாழ்த்து!!

கங்குலி ஓய்வுக்குப் பின்னர் மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராக பணியாற்றினார், கடந்த ஆண்டு பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இந்தநிலையில் ஐசிசியின் தலைவராகப் போட்டியிடுமாறு, பலரும் கங்குலிக்கு ஆதரவுகள் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று 48வது பிறந்தநாள் கொண்டாடிய கங்குலிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related posts

சிக்ஸ் அடிக்கிறவங்கதான் ஓடிப்போய் பந்தை எடுத்து வரணும்.. சாஹல் சொன்ன ஐடியா!!

TamilSportsNews

சதம், இரட்டை சதம்… களைகட்டிய ஆட்டம்… ஒரே நாளில் 490 ரன்கள் எடுத்து சாதனை!!

TamilSportsNews

51 நாட்கள் நடைபெறுகிறது இந்தியன் பிரிமியர் லீக்.. வெளியானது தகவல்!!

TamilSportsNews

Leave a Comment