Cricket

உங்க லெவலே வேற… நடுங்க வெச்சிட்டீங்க.. இந்தாங்க ஆட்ட நாயகன் விருது!!

வங்காளதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி முதலில் களம் இறங்கி ஆடி முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்சைத் துவக்கி ஆடியது, துவக்கம் முதலே அதிரடியாக ஆடி ரன் வேட்டை நடத்திய வங்கதேச அணி 2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.

கேப்டன் மொமினுல் ஹக் 79 ரன்கள் எடுத்தநிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 32 ரன்கள் எடுத்தநிலையிலும் களத்தில் இருந்தனர்.

உங்க லெவலே வேற... நடுங்க வெச்சிட்டீங்க.. இந்தாங்க ஆட்ட நாயகன் விருது!!

3 வது நாள் ஆட்டத்தில், ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களுக்கு டஃப் கொடுத்து ஆடி வந்தார் மொமினுல் ஹக், இவரது விக்கெட்டினை எப்படியும் வீழ்த்திவிட வேண்டும் என்று போராடினர் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள்.

போராடிய அவர்கள் மொமினுல் ஹக் 132 ரன்களில் அவுட் ஆக்கினர். அடுத்து முகமது மிதுன் வந்த வேகத்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆக, அடுத்து லிட்டான் தாஸ் களம் இறங்கினார்.

அணிக்கு வலு சேர்க்கும் வகையில் நிலைத்து நின்று ஆடிய இவர் 53 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகிப் போனார். இறுதியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

முஷ்பிகுர் ரஹிம் 203 ரன்கள் எடுத்தநிலையிலும், தைஜூல் இஸ்லாம் 14 ரன்கள் எடுத்தநிலையிலும் களத்தில் இருந்தனர்.அடுத்து ஜிம்பாப்வே அணி 2 வது இன்னிங்சை ஆடியது, ஆட்ட நேரம் முடிவில் 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்தது.

நேற்றைய 4 வது நாள் ஆட்டத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே 189 ரன்னில் ஆல் அவுட் ஆக, வங்க தேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரட்டை சதம் விளாசி 203 ரன்கள் எடுத்து இருந்த முஷ்பிகுர் ரஹிம் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

Related posts

இமாலய இலக்கால் நொறுங்கிபோன நியூசிலாந்து… 279 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி வாகை!!

TamilSportsNews

இப்படியும் ஒரு மோசமான ஆட்டமா?.. எதிரணியை களங்கடித்த நேபாள வீராங்கனை!!

TamilSportsNews

இப்படி பேசாதீங்க… அவரு எவ்வளவோ பண்ணி இருக்கார்… ஷமி கோபம்!!

TamilSportsNews

Leave a Comment