Cricket

என்னப்பா நீங்க.. சொதப்பித் தள்ளிய துவக்க வீரர்கள்.. 233 ரன்களுடன் படுத்துவிட்ட வங்காளதேசம்!!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது.

இந்த ஆட்டத்தினைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி டாஸ் வென்றதுடன் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி வங்கதேச அணி சார்பில் துவக்க வீரர்களாக தமிம் இக்பால், சாய்ஃப் ஹசன் ஆகியோர் களம் இறங்கினர்.

சாய்ஃப் ஹசன் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகிய நிலையில், தமிம் இக்பால் 3 ரன்களில் அவுட் ஆகினார்.

என்னப்பா நீங்க.. சொதப்பித் தள்ளிய துவக்க வீரர்கள்.. 233 ரன்களுடன் படுத்துவிட்ட வங்காளதேசம்!!

அடுத்து நஜ்முல் ஹொசைன் ஷான்டோ – கேப்டன் மொமினுல் ஹக் ஜோடி மிகவும் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது, இவர்களது ஆட்டம் அணிக்கு பக்க பலமாக இருந்தது.

அடுத்து மொமினுல் ஹக் 30 ரன்களில் அவுட் ஆக, அடுத்து  நஜ்முல் ஹொசைன் 44 ரன்களில் அவுட் ஆனார். வங்கதேச அணியைப் பொறுத்தவரை  முகமது மிதுன் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். மேலும் வங்காளதேச அணி 82.5 ஓவரில் 233 ரன்களுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த ஆட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவு பெற்றது.

Related posts

ஐபிஎல் பரிசுத்தொகை குறைச்சதுக்கு இதுதான் காரணம்..

TamilSportsNews

ரசிகர்களால் ரூ.1.35 கோடி சம்பாதிக்கும் விராட் கோலி

TamilSportsNews

தோனியை சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்த விஷயம் என் இதயத்தை சுக்கு நூறாக்கியது… தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்!!

TamilSportsNews

Leave a Comment