Cricket

ஊரடங்கு உத்தரவு: உணவு மற்றும் உடைகளை வழங்கி வரும் வங்காளதேச கிரிக்கெட் வீரர்!!

கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 9,38,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35,000 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். உலகின் பலநாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் விளையாட்டு வீரர்கள் இந்தியப் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருதல், மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குதல், ஏழை எளியோர்களுக்கு உணவு வழங்குதல் என இருந்து வருகின்றனர்.

அந்தவகையில் வங்காளதேசத்தில் உள்ள ஏழை மக்களுக்கு வங்கதேச கிரிக்கெட் வீரர் மொசாடெக் ஹொசைன் உணவுகள் மற்றும் உடைகள் வழங்கி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவு: உணவு மற்றும் உடைகளை வழங்கி வரும் வங்காளதேச கிரிக்கெட் வீரர்!!

இதுகுறித்து மொசாடெக் ஹொசைன் கூறும்போது, ‘‘கொரோனா இன்று உலகினை ஸ்தம்பிக்கச் செய்துள்ளது, கொரோனாவுக்கு எதிரான போராட்டம் சவாலானதாக உள்ளது, நான் தற்போது என்னால் முடிந்த அளவில் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் ஏழைகளுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவி செய்து வருகிறேன்.

உலகின் அனைத்து மக்களும் தங்களால் முடிந்த அளவு ஏழை மக்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு ஆதரவு தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஒவ்வொருவரும் தயவுகூர்ந்து உதவ முன் வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

தூள் கிளப்பிய துவக்க வீரர்கள்.. தாக்குப் பிடிக்காத ஹோபார்ட் ஹரிகேன்ஸ்.. சிட்னி தண்டருக்கு ஜாலியோ ஜாலி

TamilSportsNews

திடீரென்று வேகப்பந்து வீச்சாளராக மாறிய அஸ்வின்

TamilSportsNews

தோனிக்கு என்ன செய்யணும்னு தெரியும்… விளாசிய ஷேன் வாட்சன்…!

TamilSportsNews

Leave a Comment