Cricket

அதிர்ச்சியளித்த வங்கதேச பயிற்சியாளர்… பரிதவிக்கும் வீரர்கள்!!!


இந்திய மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று துவங்குகிறது.

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.

டெல்லி சாதாரணமாகவே மாசு அதிக அளவில் கொண்டதாக இருக்கும், தற்போது தீபாவளிக்கு பின் காற்று மாசு மேலும் அதிகமாகியுள்ளது.

இந்திய அணிக்கு எதிரான இந்த வங்கதேசம் ஆட்டமானது பகல் – இரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு நல்ல பார்மில் உள்ளனர்.

அதிர்ச்சியளித்த வங்கதேச பயிற்சியாளர்… பரிதவிக்கும் வீரர்கள்!!!

 இதுகுறித்து பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறியதாவது,
“வங்காளதேச அணியின் வலிமை வாய்ந்த வீரரான ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் இடத்தினை பூர்த்தி செய்வது சவாலான விஷயமாகும்.

மேலும் பகல் இரவு ஆட்டம், முன் அனுபவம் இல்லாத வீரர்களுக்கு இரண்டாவது சவாலான விஷயமாகும், இது நிச்சயம் நெருக்கடிகளுக்கு ஆளாக்கும்.

அதேபோல், டெல்லியில் நிலவும் மாசு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்துவருகிறது என்று கூறியுள்ளார்.

 மேலும், “மாசு குறித்து பெரிதாக கவலைப்படுவதற்கு இல்லை, போட்டிக்கு தயாராவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கண் எரிச்சல் மற்றும் தொண்டை வறண்டு போக செய்கிறது. ஆனால், யாருக்கும் உயிர் போகாது” என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியினைக் கொடுத்துள்ளார்.

வீரர்கள் ஒருபுறம் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Related posts

கொஞ்சம் தள்ளி வைங்க… இப்போதைக்கு முடியாது… சுஷில் குமார் கடிதம்!!

TamilSportsNews

கிறிஸ்டியன் கிளார்க்குக்கு ஆட்ட நாயகன் விருது.. அரைஇறுதிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி!!

TamilSportsNews

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி… இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

TamilSportsNews

Leave a Comment