Tennis

ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னீஸ்!!

கொரோனா அச்சுறுத்தலால் உலகம் முழுவதும் 200 நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கானது அமலில் இருந்தது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை உட்பட எந்தப் போட்டிகளும் நடைபெறவில்லை.

தற்போது பெரிய அளவிலான நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.  அந்தவகையில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.

ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னீஸ்!!

அதாவது ஏறக்குறைய 5 மாதங்களுக்குப் பின்னர் டென்னீஸ் போட்டியானது துவங்கியது. அதனைத் தொடர்ந்து இத்தாலியில் 31 வது பாலெர்மோ லேடீஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 9 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த ஆண்டு 134 வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை லண்டனில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் உலகினை ஆட்டிப் படைத்த நிலையில், விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை பாரீஸ் நகரில் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியானது மெல்போர்ன் நகரில் ஜனவரி 18 ஆம் தேதி துவங்க இருந்தநிலையில் தற்போது பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


Related posts

விம்பிள்டன் டென்னிஸில் முதல் சுற்றில் பெடரர் வெற்றி

TamilSportsNews

நடாலின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது.. ஒலிம்பிக் சாம்பியன் புகழாரம்!!

TamilSportsNews

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வெற்றி பெற்ற டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ்!!

TamilSportsNews

Leave a Comment