Football

கோபா அமெரிக்கா கால்பந்தில் அரைஇறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, சிலி அணிகள்

கோபா அமெரிக்கா கால்பந்தில் அரைஇறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, சிலி அணிகள்

பிரேசில்: 

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

கோபா அமெரிக்கா கால்பந்து:

கோபா அமெரிக்கா கால்பந்து தென் அமெரிக்க கண்டத்தின் 10 அணிகளோடு ஆசியாவின் கத்தார், ஜப்பான் அணிகளும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இந்த 12 அணிகளும் ஏ, பி, சி என்ற 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தின் முடிவில் வெற்றிபெற்று முன்னிலை வகிக்கும் முதல் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

கோபா அமெரிக்கா கால்பந்தில் அரைஇறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா, சிலி அணிகள்

அரைஇறுதிக்குள் அர்ஜென்டினா, சிலி:

இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது.
10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் மார்டினெஸ், சக வீரர் செர்ஜி அகுரோ கோல் போட்டார்.

74-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணி வீரர் ஜியோவானி லோ செல்சோ இந்த கோலை அடித்தார். வெனிசுலா அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிலி அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலை (0-0) வகித்தன.

இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தங்களது முதல் 4 பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கினார்கள். சிலி அணியின் கடைசி பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் அலெக்சிஸ் சாஞ்சஸ் கோலாக்கினார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் சிலி அணி 5-4 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

Related posts

கடைசி நிமிட கோல்… கோவாவை வீழ்த்திய பெங்களூரு!!

TamilSportsNews

போராடிய பெங்களூரு.. இறுதிப் போட்டிக்குள் கால் பதித்த கொல்கத்தா அணி

TamilSportsNews

பெங்களூரு அணியையே வீழ்த்தீட்டங்களே பாஸ்… எப்புடி இப்படி?

TamilSportsNews

Leave a Comment